ராமநாதபுரம் சோத்துாருணியில் குப்பை கழிவுகள் கொட்டுவதால் சுகாதாரக்கேடு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள சோத்துாருணியில் குப்பை, இறைச்சி, கோழிக்கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறதுஇதனை அப்புறப்படுத்தக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் நகரில் உள்ள ஊருணிகளில் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் பல ஊருணிகளுக்கு நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது. நீர் பிடிப்பு உள்ள சோத்துாருணியில் அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஊருணியை சுற்றி உள்ளவர்கள் சுகாதாரக்கேடால் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் இரண்டாவது முறையாக மனு அளித்துள்ளனர். ஏற்கனவே கொடுத்த புகார் மனு மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இரண்டாவது முறையாக கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.