உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடிவழக்கு விசாரணை மார்ச் 13க்கு தள்ளி வைப்பு

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடிவழக்கு விசாரணை மார்ச் 13க்கு தள்ளி வைப்பு

ராமநாதபுரம்:ராமேஸ்வரம் கோயிலில் ஊழியர்களின் சேம நல நிதியில் ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கு விசாரணை மார்ச் 13க்கு தள்ளி வைக்கப்பட்டது.இக்கோயில் ஊழியர்கள் சேம நல நிதி கணக்கில் செலுத்த வேண்டிய பணத்தை கோயில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சிவனருள்குமரன், கணக்கர் ரவீந்திரன் ஆகியோர் மோசடி செய்ததாக ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்தனர். 2020ல் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.போலீஸ் விசாரணையில் ராமநாதபுரம் கரூர் வைஸ்யா வங்கியில் கோயில் பெயரில் நன்கொடைக்காக அனுமதியின்றி கணக்கு துவங்கி மோசடி செய்ததும், கணக்கு துவங்க முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.சிவனருள் குமரன் கோயில் பணத்தை தனது தந்தை கோபால் வங்கி கணக்கிற்கு மாற்றியதும் கண்டறியப்பட்டது. கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சிவனருள்குமரன், அவரது தந்தை கோபால், கணக்கர் ரவீந்திரன், முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்தனர்.இந்த வழக்கு நேற்று ராமநாதபுரம் ஜே.எம்., 2-வது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சம்பந்தப்பட்ட நால்வரும் ஆஜராயினர். மாஜிஸ்திரேட் பிரபாகரன் வழக்கை மார்ச் 13 க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி