மேலும் செய்திகள்
காப்புரிமை குறித்து விழிப்புணர்வு
7 minutes ago
ராமேஸ்வரத்தில் ஆதியோகி சிவன் சிலை ஊர்வலம்
8 minutes ago
தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக தட்டைப்பயிறு
9 minutes ago
பரமக்குடி: பரமக்குடியில் புத்தாண்டு நாளில் அரை மணி நேரம் கொட்டிய மழையால் வழக்கம் போல் ரோடுகளில் கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் சில நாட்களாக பனி மூட்டம் சூழ்ந்த நிலையில் பரமக்குடியில் 20 டிகிரி வரை குளிர் இருந்து வருகிறது. இதனால் காலையில் மார்கழி மாதம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் உற்சாகமான சூழலில் உள்ளனர். நேற்று மதியம் 3:30 மணிக்கு பலத்த மழை பெய்தது. அரை மணி நேரம் வரை நீடித்த மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வழக்கம் போல் ஆர்ச், காந்தி சிலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கழிவு நீர் குளம் போல் தேங்கியது. மணிக்கணக்கில் தேங்கிய கழிவு நீரில் பொதுமக்கள் சிரமப்பட்டு செல்ல நேர்ந்தது. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் ரோடு சேதமடைந்து வருவதால் வாகனங்கள் தடுமாறுகின்றன. எனவே நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை நிர்வாகத்தினர் ரோடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 minutes ago
8 minutes ago
9 minutes ago