உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்பாலைக்குடியில் ஹைமாஸ் விளக்கு பழுது: பயணிகள் பாதிப்பு

திருப்பாலைக்குடியில் ஹைமாஸ் விளக்கு பழுது: பயணிகள் பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: கிழக்கு கடற்கரை சாலை திருப்பாலைக்குடி பஸ் ஸ்டாப் பகுதியில் கடந்த ஆட்சியின் போது பயணிகள் நலன் கருதி ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது. இந்நிலையில் சில மாதங்களாக ஹைமாஸ் விளக்கு பழுதடைந்து அப்பகுதி இருள் சூழ்ந்துஉள்ளது. இரவில் பஸ் ஸ்டாப் வரும் பயணிகளும், பாதசாரிகளும் சிரமப்படுகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பழுதடைந்த ஹைமாஸ் விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை