உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்பரங்குன்றத்தில் பங்கேற்பது குறித்து ஹிந்து முன்னணி கூட்டம்

திருப்பரங்குன்றத்தில் பங்கேற்பது குறித்து ஹிந்து முன்னணி கூட்டம்

ரெகுநாதபுரம்; திருப்பரங்குன்றம் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ரெகுநாதபுரம் அருகே முத்துப்பேட்டை சேதுநகரில் ஹிந்து முன்னணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.ஹிந்து முன்னணி மாவட்டச் செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் கிஷோர் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் சரவணன், கிளைத்தலைவர்கள் பிரதீப், பிரசாந்த், முருகபூபதி, விஜய் பிரபு, குகன், விக்னேஷ், கார்த்திக் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பிப்., 4ல் ஹிந்து முன்னணி சார்பில் தமிழ் கடவுள் முருகன் மலையை காக்க திருப்பரங்குன்றத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஏராளமானவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது குறித்து தீர்மானிக்கப்பட்டது.திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருவாரியான பகுதிகளில் ஹிந்து முன்னணி சார்பில் அறப்போராட்டம் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை