உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பலத்த மழைக்கு சாய்ந்த மரங்கள் வீடு சேதம்; மாடு பலி

பலத்த மழைக்கு சாய்ந்த மரங்கள் வீடு சேதம்; மாடு பலி

திருவாடானை: திருவாடானை, தொண்டியில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் பலத்த மழை பெய்ததில் திருவாடானையிருந்து பாண்டுகுடி ரோட்டில் 2 மின்கம்பங்கள் சாய்ந்தன. கிளியூரில் ரோட்டில் பனைமரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாண்டுகுடி, நகரிகாத்தான் பகுதியில் மின்கம்பியில் மரம் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.தேளூர் கிராமத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மேய்ச்சலுக்காக சென்ற அதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தனுக்கு சொந்தமான பசுமாடு பலியானது. கால்நடை டாக்டர் பரிசோதனைக்கு பின் மாடு அடக்கம் செய்யப்பட்டது.சிறுநல்லுார் கிராமத்தை சேர்ந்த மாதாபிச்சை என்பவருக்கு சொந்தமான வீட்டில் மரம் விழுந்ததில் வீடு சேதமடைந்தது. மின்வாரிய ஊழியர்கள் சென்று மரங்களை அகற்றி மின்தடையை சரி செய்தனர். வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !