உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தீ விபத்தில் வீடு சேதம்: நிவாரணம் தர கோரிக்கை

தீ விபத்தில் வீடு சேதம்: நிவாரணம் தர கோரிக்கை

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க., சார்பில் வேதாளையில் தீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.வேதாளை மேற்கு தெருவைச் சேர்ந்த ஆமீனா அம்மாள். இவர் தனது வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.ஏப்.,16ல் மின் கசிவு ஏற்பட்டு காஸ் சிலிண்டர் வெடித்து வீட்டில் உள்ள உடைமைகள், தங்க நகைகள் ரூ.18 ஆயிரத்து 500 பணம், குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் தீயில் எரிந்தது. வீடும் சேதமடைந்துள்ளது. எனவே குடும்ப வாழ்வாதாரத்திற்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை