| ADDED : பிப் 01, 2024 07:12 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மனித நேய வார விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் வி.குமரவேல்தலைமை வகித்தார். கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆடிவேல் பேசினார். புள்ளியியல் ஆய்வாளர்முருகலிங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். எஸ்.ஐ.,க்கள் இளங்கோ, செந்தாமரைக்கண்ணன், எஸ்.எஸ்.ஐ.,க்கள் சந்திரசேகர், டெய்சி நிர்மலாராணி,வசந்தி உட்பட போலீசார் பங்கேற்று மாணவர்களுக்கு மனிதநேயம், அன்பு,கருணை, ஒற்றுமை ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுதல், பசிப்பிணி நீக்குவது,கல்வியின் முக்கயத்துவம், ஜாதி, மத நல்லிணக்கம் குறித்து விளக்கினர்.கருத்தரங்கில் சிறப்பாக செயல்பட்ட 5 மாணவர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள்வழங்கப்பட்டது.