உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில்  தேங்கிய மழைநீர் வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரத்தில்  தேங்கிய மழைநீர் வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மழை நீரால் பஸ் ஸ்டாண்ட் ரோடு, அரண்மனை, சந்தை ரோட்டில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வியாபாரிகள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.ராமநாதபுரம், அதை சுற்றியுள்ள பட்டணம்காத்தான், சக்கரகோட்டை ஊராட்சி பகுதிகளில் நேற்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. ரயில்வே பீடர் ரோடு நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே போதிய வடிகால் வசதியின்றி கீழக்கரை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் குளம் போல தண்ணீர் தேங்கியது. இதே போல பாரதிநகர், ராமேஸ்வரம் ரோடு, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே மதுரை ரோடு, அரண்மனை சந்தை ரோடு ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ