உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் புதிய டீசல் பங்க் திறப்பு விழா

ராமேஸ்வரத்தில் புதிய டீசல் பங்க் திறப்பு விழா

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரத்தில் நாகவள்ளி என்டர்பிரைசஸ் சார்பில் புதிய டீசல் பங்க் திறப்பு விழா நேற்று நடந்தது. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.ராமேஸ்வரம் எம்.ஆர்.டி.நகரில் தேசிய நெடுஞ்சாலையோரம் நாகவள்ளி என்டர்பிரைசஸ் சார்பில் புதிய டீசல் பங்க் அமைத்தனர். இந்த டீசல் பங்க் அருகில் உணவு விடுதியும் உள்ளதால் தனுஷ்கோடி செல்லும் சுற்றுலாப் பயணி கள், பக்தர்கள் வாகனங்களில் எரிபொருள் நிரப்பி உணவருந்தும் வசதியும் உள்ளது.பங்க் உரிமையாளரும் ராமேஸ்வரம் நகராட்சி முன்னாள் தலைவரான அர்ச்சுனன், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, ஆப்பநாடு மறவர் சங்க முன்னாள் தலைவர் முனியசாமி, ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, டாக்டர் மணிகண்டன், ம.தி.மு.க., இளைஞரணி துணைச் செயலாளர் கராத்தே பழனிச்சாமி, யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், தி.மு.க., கவுன்சிலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி