உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டிராக்டரில் அதிகளவு பாரம் ஏற்றி  ஆபத்தான பயணங்கள் அதிகரிப்பு

டிராக்டரில் அதிகளவு பாரம் ஏற்றி  ஆபத்தான பயணங்கள் அதிகரிப்பு

ராமநாதபுரம்; ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் மினி சரக்கு வாகனங்கள், டிராக்டரில் அதிக பாரத்தை ஏற்றி அதன் மீது மக்கள் அமர்ந்து செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.ராமநாதபுரம் நகரை சுற்றிலும் பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சூரன்கோட்டை, புத்தேந்தல், பேராவூர், காவனுார் என ஏராளமான கிராமங்கள் உள்ளன. இவ்விடங்களில் நடைபெறும் கட்டுமானம், விவசாயப் பணிகளுக்கு மினிசரக்கு லாரி, டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவைக் காட்டிலும் அதிகளவில் பாரம் ஏற்றுகின்றனர். மேலும் அந்த மூடைகள் மக்கள் ஆபத்தான முறையில் அமர்ந்து பயணம் செய்கின்றனர். இதனால் வாகன கவிழ்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அளவிற்கு அதிகமாக பாரம் ஏற்றி ஆட்களுடன் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை