மேலும் செய்திகள்
தமிழ்செம்மல் விருது விண்ணப்பிக்கலாம்
16-Aug-2025
ராமநாதபுரம்; பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் மற்றும் 2012க்கு முன் அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்தவர்களும் செப்.,19க்குள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி தேர்விற்கு விண்ணப்பிக்கவேண்டும். 2025-26ம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு நேரடியாக எழுத உள்ள தனித் தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்யலாம். ஏற்கனவே 2012க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் பதிவு செய்யலாம். ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகத்தை நேரில் அணுகி பதிவு கட்டணமாக ரூ.125 செலுத்தி தங்களது பெயரை செப்.,19க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்ப படிவத்தை www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது பயிற்சி வகுப்பிற்கான பதிவு மட்டுமே. பூர்த்தி செய்து இரண்டு நகல்கள் எடுத்து தனித் தேர்வர்கள் சேவை மையத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும். சேவை மையங் களுக்கு சென்று செய்முறை தேர்விற்கு பதிவு செய்வதற்கான ஒப்புகை சீட்டு, முன்பு தேர்வு எழுதிய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றை இணைத்து ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த ஒப்புகை சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி ஹால்டிக்கெட்டை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளமாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகம், மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். www.dge.tn.gov.inஎன்ற இணைதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் பாத்திமா தெரிவித்துள்ளார்.
16-Aug-2025