| ADDED : ஜன 20, 2024 04:33 AM
கடலாடி: மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கடலாடியில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஒன்றியக்குழு கவுன்சில் கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. ஒன்றியக் குழு தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆத்தி முன்னிலை வகித்தார். ஒன்றியக் கவுன்சிலர் முனியசாமி பாண்டியன் வரவேற்றார். கமிஷனர் ஜெய ஆனந்த் வரவேற்றார்.கூட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தரைக்குடி, செவல்பட்டி, கொண்டு நல்லான்பட்டி, கொக்கரசன் கோட்டை, டி.எம்.கோட்டை, முத்துராமலிங்கபுரம், வேப்பங்குளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட கிராமங்களில் விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்து மண்ணரிப்பு பாதிப்பை சந்தித்துள்ளது. சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும், விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.