மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
7 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
7 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
7 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
7 hour(s) ago
தொண்டி; தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருவதால் தடுப்பு சுவர் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மீனவர்கள் வலியுறுத்தினர்.இது குறித்து மீனவர்கள் கூறியதாவது: 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள கடல் முகத்துவாரம் துார்ந்து விட்டதால் படகுகளை கடற்கரை ஓரம் நிறுத்தியுள்ளோம். புயல் காலங்களில் பலத்த காற்று வீசும் போது படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைகிறது. கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. வரும் காலங்களில் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் இழப்பு ஏற்படும். ஆகவே எஸ்.பி.பட்டினம் முதல் தேவிபட்டினம் வரையிலான கடற்கரை பகுதிகளின் முக்கிய இடங்களில் கடல் தடுப்பு சுவர் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.பொதுப்பணித்துறையினர் கூறுகையில், காரங்காட்டில் தடுப்பு சுவர் அமைக்க திட்டம் தயார் செய்து அரசுக்கு அனுப்பபட்டுள்ளது. மற்ற கிராமங்களில் இது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago