உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பொய்யாமொழி அம்மன் கோயில் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

பொய்யாமொழி அம்மன் கோயில் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: வாணியக்குடியில் பொய்யாமொழி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினம் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இளையான்குடி ரோடு, காட்டு பரமக்குடி விலக்கில் இருந்து கோயில் வழியாக வாணியக்குடி செல்லும் ரோடு குண்டும், குழியுமாக ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளது.பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில் உள்ளதால் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும், அப்பகுதி கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை