நிழற்குடை அருகே பஸ் நிறுத்த வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சனவேலி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சுற்றிலும் அமைந்துள்ள பெரும்பாலான கிராமத்தினர், வெளியூர் செல்வதற்கு சனவேலி பஸ் ஸ்டாப்பிற்குவருகின்றனர்.பயணிகள் நலனை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது பழைய பஸ் நிறுத்தத்திற்கு சிறிது தொலைவில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு ஓராண்டிற்கும் மேலாகியது. பயணியர் நிழற்குடை அமைந்துள்ள பகுதியில் பஸ்கள் நிறுத்தப்படாமல் பழைய பஸ் நிறுத்தத்தில் தொடர்ந்து பயணிகளை ஏற்றி இறக்குவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே நிழற்குடை அருகே பஸ்சை நிறுத்தி மக்களை ஏற்றி இறக்க வேண்டும்.