உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண்மாய் பராமரிப்பு பணிகள் ஆய்வு

கண்மாய் பராமரிப்பு பணிகள் ஆய்வு

திருவாடானை : திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 49 கண்மாய்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் மத்திய அரசு நிதி 60 சதவீதம், மாநில அரசு நிதி 40 சதவீதம் பங்களிப்புடன் பணிகள் நடக் கிறது. திருவாடானை அருகே கானாட்டாங்குடி கண்மாயில் ரூ.1 கோடியே 6 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை மத்திய நீர் ஆணைய குழு இயக்குனர் அசோகன், துணை இயக்குநர் அஷரப்பாஷா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். உதவி செயற்பொறி யாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ