நவ.14ல் பாம்பன் புதிய பாலத்தில் ரயில்வே கமிஷனர் ஆய்வு
ராமேஸ்வரம்:பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நவ.14ல் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்ய உள்ளார்.பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி 100 சதவீதம் முடிந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி நவ.14 ல் ஆய்வு செய்ய உள்ளார். நவ.12ல் மதுரையில் இருந்து சிறப்பு ரயிலில் வரும் சவுத்ரி மண்டபம் வரை ரயிலில் வந்து ராமேஸ்வரத்தில் தனியார் விடுதியில் தங்குகிறார்.நவ.13ல் ராமேஸ்வரம் கோயில், தனுஷ்கோடி சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். நவ.14ல் மண்டபம் வந்து அங்கிருந்து சிறப்பு ரயில் பெட்டியில் 90 கி.மீ., வேகத்தில் புறப்பட்டு பாம்பன் பாலம் வழியாக ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் வரை சோதனை ஓட்டத்தை ஆய்வு செய்கிறார். அங்கிருந்து மீண்டும் மதியம் 12:30 மணிக்கு புறப்பட்டு 12:45 மணிக்கு பாம்பன் பாலத்தில் ஆய்வு செய்கிறார். மதியம் 1:00 மணிக்கு மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் செல்கிறார். அங்கிருந்து 2:00 மணிக்கு புறப்பட்டு மாலை 4:30 மணிக்கு மதுரை சென்றடைகிறார்.