உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஒருங்கிணைந்த பண்ணையம்; விவசாயிகளுக்கு பயிற்சி

ஒருங்கிணைந்த பண்ணையம்; விவசாயிகளுக்கு பயிற்சி

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தில் வெட்டுக்குளத்தில் விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு சுப்ரியா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்தும், ஆடு, மாடு, கோழி வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் கூடுதல் லாபம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து வேளாண்மை உதவி இயக்குனர் சுப்ரியா பேசியதாவது: பண்ணை குட்டையில் மீன் வளர்த்தல், ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் உள்ளிட்டவைகள் மூலம் விவசாயிகள் பயனடையலாம். விவசாயிகள் மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்ப பயிர்களை சாகுபடி செய்து பயனடைய முடியும். வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் உள்ளிட்ட இரு பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் முழுமையாக பயன் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். பயிற்சியில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் முருகானந்தம், உதவி வேளாண்மை அலுவலர் ரிஷி, உதவி தொழில் நுட்ப மேலாளர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை