உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின் இணைப்பில் முறைகேடு 6 இணைப்புகள் துண்டிப்பு

மின் இணைப்பில் முறைகேடு 6 இணைப்புகள் துண்டிப்பு

திருவாடானை : திருவாடானையில் மின் இணைப்புகளில் முறைகேடு நடந்ததால் 6 மின் இணைப்புகள் துண்டிக்கபட்டன.ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் திலகவதி உத்தரவின் படி, திருவாடானை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி, திருவாடானை உதவி பொறியாளர் தமிழ்செல்வன், கணக்கீட்டு அலுவலர் மோகன் ஆகியோர் தலைமையில் ஆர்.எஸ்.மங்கலத்தில் கோட்ட அளவிலான கூட்டு ஆய்வு செய்யபட்டது. வீடு, கடை, கட்டுமான மின் இணைப்புகளில் 11 பொறியாளர்கள், 470 மின் இணைப்புகளில் ஆய்வு செய்தனர். இதில் 6 மின் இணைப்புகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு ரூ.91 ஆயிரத்து 369 இழப்பீட்டு தொகை கணக்கிடப்பட்டு, ரூ.60 ஆயிரத்து 210 வசூல் செய்யபட்டது. அந்த மின் இணைப்புகளை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை