மேலும் செய்திகள்
பக்தர்களின் எடை பார்த்து டோலி கட்டணம்
07-Dec-2024
ராமநாதபுரம் : மாதம் ஒரு முறை மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்த முன்னேட்டமாக சில பகுதிகளில் மட்டும் ஒரு மாதம் மின்விநியோகம் கணக்கீடு செய்யும் பணியில் மின்வாரிய அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். நுகர்வோர் கேள்வி கேட்டால் இந்த மாதம் மட்டும் தான். அதன் பிறகு 2 மாதங்களுக்கு ஒருமுறை தான் ரீடிங் எடுப்போம் என சமாளிக்கின்றனர்.தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின்வாரியம் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை அரசு உயர்த்தி வருகிறது. ஆனால் ஆட்சிக்கு வரும் முன்பு தி.மு.க., அரசு அறிவித்த மாதா மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறை இதுவரை அமல்படுத்தப்படவில்லை. மாதா மாதம் ரீடிங்க் எடுக்கும் முறையை அமல்படுத்த முடியாதது ஏன், அவ்வாறு கணக்கீடு செய்தால் வருவாய் எவ்வளவு என கண்டறிய முன்னோட்டமாக சில பகுதிகளில் மட்டும் ஒரு மாதத்திற்குரிய மின் பயன்பாட்டை கணக்கீடு செய்து அதனை வசூலிக்க மின்வாரிய அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். இதன்படி ராமநாதபுரத்தில் சில பகுதிகளில் நவ., மாதத்திற்குரிய மின்கட்டணம் மட்டும் கணக்கிட்டு செலுத்த வலியுறுத்தியுள்ளனர்.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 2 மாதங்களுக்கு ஒருமுறை தான் மின்கட்டணம் வசூல் நடக்கிறது. 3 பேர் பணிபுரிந்த இடத்தில் 2 பேர் உள்ளதால் ராமநாதபுரம் நகர் பகுதியில் நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரித்து ஒரு மாதத்திற்குரிய கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதங்களில் வழக்கம் போல 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கீடு செய்யப்படும். மாதந்தோறும் மின் கணக்கீடு குறித்து எந்த அறிவிப்போ, உத்தரவோ வரவில்லை என்றனர்.
07-Dec-2024