உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இஸ்லாமிய சொற்பொழிவு

இஸ்லாமிய சொற்பொழிவு

திருப்புல்லாணி: - திருப்புல்லாணியில் உள்ள தனியார் மஹாலில் அதிராம்பட்டினம் ஸலாஹிகள் பேரவை நடத்திய இஸ்லாமிய விழிப்புணர்வு சொற்பொழிவு நடந்தது. அதிராம்பட்டினம் அரபிக் கல்லுாரி முதல்வர் அகமது இப்ராஹிம் தலைமை வகித்தார். ஸலாஹிகள் பேரவை கவுரவ ஆலோசகர் முகம்மது தொகுப்புரை வழங்கினார்.தொண்டி ஹிப்ழு மதரஸா மவுலவி அப்துல்லா ஸலாகி கிராத் ஓதினார். திருப்புல்லாணி நிஸ்வான் மதரசா தலைவர் அப்துல் வகாப், தினைக்குளம் பள்ளிவாசல் தலைவர் பஷீர் மவுலானா, திருப்புல்லாணி ஜூம்மா மஸ்ஜித் தலைவர் முகமது உசேன் உட்பட பலர் பங்கேற்றனர்.'இணையதளங்களும் இளைய தலைமுறையினரும்,' என்ற தலைப்பில் வந்தவாசி பள்ளிவாசல் இமாம் முஹம்மது யூனுஸ் பேசினார். போதை பழக்கத்தால் விளையும் கேடுகள் குறித்து சென்னை ஆவடி தலைமை இமாம் அப்துல் காதர் பேசினார்.இமாம் முஹம்மது இப்ராஹிம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை