கடலாடியில் பட்டா வழங்கல்
கடலாடி: கடலாடி தாலுகா அலுவலகத்தில் வருவாய் கணக்கு தீர்வு குறித்த ஜமாபந்தி நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி தலைமை வகித்தார். கடலாடி தாசில்தார் முருகேஷ் முன்னிலை வகித்தார்.முந்தைய நாள் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பட்டா மாறுதல் கோரியவர்களுக்கு பட்டா மாறுதல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது.