உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் ஜப்பான் பக்தர்கள் உலக நன்மைக்காக யாகம்

ராமேஸ்வரத்தில் ஜப்பான் பக்தர்கள் உலக நன்மைக்காக யாகம்

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரத்தில் ஜப்பான் பக்தர்கள் உலக நன்மைக்காக யாகம் செய்து ராமநாதசுவாமியை தரிசனம் செய்தனர். ஜப்பான் டோக்கியோவைச் சேர்ந்தவர் சுவாமி பாலகும்ப குருமணி. இவர் டோக்கியோவில் சிவ ஆசிரமம் வைத்துள்ளார். இந்திய கலாசாரம், பண்பாடுகளை அறியவும், ஹிந்து கோயில்களில் வழிபாட்டு முறைகளை கண்டு தரிசிக்க சுழற்சி முறையில் பக்தர்களுடன் இந்தியாவிற்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றார். அதன்படி நேற்று இவரது தலைமையில் 65 ஜப்பான் பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். இவர்கள் முதலில் தனியார் மகாலில் உலக நன்மைக்காக யாகம் செய்து கோயிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக மதுரை, தஞ்சை, திருவண்ணாமலை, திருத்தணி உள்ளிட்ட பல முக்கிய கோயில்களில் தரிசனம் செய்ய உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஆக 11, 2025 07:55

போய் ஜப்பான்ல பண்ண முடியுமான்னு பாருங்க. சுற்றுச் சூழல் பாதிப்புன்னு உள்ளே தள்ளிருவாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை