காமராஜர் பிறந்த நாள் விழா
கீழக்கரை:கீழக்கரையில் அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.காமராஜரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பேரவை மாநில இணை செயலாளர் அருள் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார். களரி தியாகராஜன் வரவேற்றார்.நகர் தலைவர் பழனி, அடஞ்சேரி ரகுபதி, குமரன், பிரசன்னா, லிங்கம், குமார், ரகு ஆனந்த், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உத்தரகோசமங்கை அருகே களரி, அடஞ்சேரி பகுதிகளில் அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.