உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாநில போட்டிகளுக்கு தேர்வான கமுதகுடி அரசுப்பள்ளி மாணவர்கள்

மாநில போட்டிகளுக்கு தேர்வான கமுதகுடி அரசுப்பள்ளி மாணவர்கள்

பரமக்குடி: பரமக்குடி அருகே கமுதகுடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். ராமநாதபுரம் மாவட்ட அளவில் தமிழ், ஆங்கில இலக்கிய மன்றம் மற்றும் சிறார் திரைப்பட மன்ற போட்டிகள் நடந்தன. இதில் கமுதகுடி பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பலர் பங்கேற்றனர். 6, 7ம் வகுப்பு பிரிவில் கதை வசனம் எழுதுதலில் மேகவர்ஷனா முதலிடம், ஆங்கிலக் கதை கூறுதலில் பூமிகா முதலிடம், 8ம் வகுப்பு பிரிவில் கதை வசனம் எழுதுவதில் நித்திய ஸ்ரீ முதலிடம், ஆங்கில கவிதை போட்டியில் யோகேஷ் குமார் முதலிடம், தமிழ் கட்டுரையில் லயா ஸ்ரீ முதலிடம் பெற்றனர். இதே போல் 9ம் வகுப்பு பிரிவில் கரண் தமிழ் கதை சொல்லுதலில் முதலிடம் பெற்றார். இவர்கள் நவ., 11, 12, 13 தேதிகளில் கோவை, மதுரை மற்றும் திருச்சியில் நடக்க உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் சக்தி உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி