உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு

முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு

ராமநாதபுரம்: கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம், சுற்றியுள்ள இடங்களில் உள்ளமுருகன் கோயில்களில் சிறப்பு அபிேஷகம், பூஜை வழிபாடு, அன்ன தானம் நடந்தது. புரட்டாசி மாதம் கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் காலை, மாலை நேர பூஜைகளில் பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடுநடந்தது. இதே போல் வழிவிடுமுருகன் கோயில், குமரய்யா கோயில், வெளிப்பட்டணம் பாலசுப்பிரமணியம் சுவாமி, பாலதண்டாயுத சுவாமி கோயில் மற்றும் பட்டணம்காத்தான் வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலக வளாகம் நீச்சல் குளம் அருகேயுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் முருகப் பெருமானுக்கு அபிேஷகம் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ