உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை: கட்சிகளுக்கு இடமில்லை; அரசியல் வாடை இல்லாத ஸ்ரீநகர்! கொடிக்கம்பங்களுக்கு தடை

கீழக்கரை: கட்சிகளுக்கு இடமில்லை; அரசியல் வாடை இல்லாத ஸ்ரீநகர்! கொடிக்கம்பங்களுக்கு தடை

கீ ழக்கரை அருகே ஸ்ரீ நகரில் அரசியல் கட்சிகளுக்கு இட மளிக்காத வகையில் அப்பகுதி திகழ்கிறது. கீழக்கரை அருகே வளர்ந்து வரும் நகர் பகுதியாக ஸ்ரீநகர் அமைந்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் துவங்கப்பட்ட ஸ்ரீநகர் பொதுநல சங்கம் சார்பில் அரசியல் கட்சியின் கொடிக்கம்பங்கள் உள்ளிட்ட விஷயங்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் மற்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் 3000 பேருக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். காஞ்சிரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ நகரில் அரசியல், ஜாதி, மத, இனத் தலைவர்கள் மற்றும் நடிகை, நடிகர்கள் உள்ளிட்டவர்களின் படமோ, கொடியோ டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு எவ்விதத்திலும் அனுமதி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள எந்த ஒரு இடத்திலும் கொடிக்கம்பங்களோ அரசியல் வாடை எதுவும் இல்லாமல் ஒற்றுமை மிக்க பகுதியாக திகழ்கிறது. ஸ்ரீநகர் பொதுநல சங்கத்தின் தலைவர் கருப்பண்ணன் கூறியதாவது: கீழக்கரை அருகே வளர்ந்து வரும் பகுதி யாக உள்ள ஸ்ரீநகர் கடந்த 2000ம் ஆண்டில் உருவானது. இந்நகரம் துவங்கும் போதே அடிப்படை கொள்கைகள் வகுக்கப்பட்டன. அவற்றின்படி எவ்வித அரசியல், ஜாதி, மதத் தலைவர்கள் உள்ளிட்டவர்களின் படங்களோ, கொடிகளோ சினிமா நடிகர்களின் உருவ கட்டமைப்பு விஷயங்களோ இங்கு இடம் பெறக் கூடாது என்ற கொள்கை முடிவுடன் உள்ளோம். அதற்கு ஸ்ரீநகர் பகுதி மக்கள் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு உள்ளது. ஆண்டிற்கு ஒரு முறை தை பொங்கல் விழாவும், பத்திர காளி அம்மனுக்கு ஆடி உற் ஸவமும் விமரிசையாக கொண்டாடி வருகிறோம். ஊரில் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு வரும் நிலையில் அவர வர்களுக்கு மனதிற்கு பிடித்த அரசியல் தலைவர்களுக்கு ஓட்டு போட்டுக் கொள்ளலாம். ஆனால் அதனை முன்னிறுத்தி எவ்வித வீடுகளிலும் சுவரொட்டிகளோ அல்லது விளம்பர பதாகைகளோ வைப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை. மொத்தத்தில் ஸ்ரீநகர் கட்டுப்பாடு மிக்க ஒற்றுமை கிராமமாக திகழ்கிறது. 100 பேர் உறுப்பினர்களாக உள்ளோம். பெரும்பாலான பிரச்னைகளுக்கு இங்கேயே பேசி தீர்வு கண்டு கொள்கிறோம். எங்களின் நிபந்தனைகள் பற்றி அறிந்து கொண்ட அரசியல் கட்சி யினர் எங்களுக்கு உரிய ஒத்துழைப்பை தருகின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை