| ADDED : ஜன 04, 2024 01:59 AM
சாயல்குடி; பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த சிலம்பம் விளையாட்டு போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் கம்பு சண்டை பிரிவில் முதலிடம் பெற்ற ஏழாம் வகுப்பு மாணவர் கார்த்திக் பாலன் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.இரட்டைக் கம்பு பிரிவில் எட்டாம் வகுப்பு மாணவர் முருகராஜ் பாண்டி மூன்றாம் இடமும், கம்பு சண்டை பிரிவில் 10ம் வகுப்பு காளீஸ்வர பாண்டியன் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். கடலாடி வட்டார அளவில் நடந்த போட்டிகளில் 9ம் வகுப்பு மாணவிகள் கவிதையில் ஜெய கார்த்திகா, கட்டுரை போட்டியில் முத்தமிழ் முகிலா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.சாதித்துள்ள மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஷ் வின்சென்ட் ஜெய்சிங், ஆசிரியர்கள் லட்சுமணன், பிரபு, இம்மானுவேல், தமிழாசிரியர் செலஸ்டின் மகிமை ராஜ், ஆசிரியர் திவ்யா, அலுவலக உதவியாளர் சாந்தி, சரவணன் ஆகியோர் பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினர்.