உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேக வாஸ்து பூஜை

கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேக வாஸ்து பூஜை

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம்கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வாஸ்து பூஜையுடன் நேற்று(ஜன.25) கோயில் திருப்பணி வேலைகள் துவங்கியது.ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட புவனேஸ்வரி அம்மன் சமேத கைலாசநாதர் கோயில், ஆர்.எஸ். மங்கலத்தில் அமைந்துள்ளது. 2004ல் இந்தக் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு நேற்று மூலவர், பரிவார தெய்வங்களுக்கு பூஜை நடந்தது. கட்டுமான பணிக்கான வாஸ்து பூஜைகள் நடைபெற்றது. திருப்பணி குழு தலைவர் கந்தசாமி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !