உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எமனேஸ்வரம் உய்யவந்தாள் அம்மன் கோயிலில் பிப்.22ல் கும்பாபிஷேகம்

எமனேஸ்வரம் உய்யவந்தாள் அம்மன் கோயிலில் பிப்.22ல் கும்பாபிஷேகம்

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் உய்யவந்தாள் அம்மன் கோயில் கும்பாபிஷேகம் பிப்.22ல் நடக்கிறது.எமனேஸ்வரம் ஆண்டிப்பண்டாரத்தார் சமூக நலச் சங்கத்துக்கு பாத்தியமான உய்ய வந்தாள், கருப்பண சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழா பிப்.19 காலை 9:15 மணிக்கு மங்கள இசையுடன் துவங்க உள்ளது. தொடர்ந்து பூர்வாங்க பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, இரவு பூர்ணாகுதி நடக்கிறது. மேலும் பிப்.20, 21 ஆகிய இரண்டு நாட்கள் 5 கால யாக பூஜைகள் நிறைவடையும். பிப்.22 காலை 8:00 மணிக்கு 6ம் கால யாக பூஜைகள் துவங்கி மகாபூர்ணாகுதி நடக்கிறது. தொடர்ந்து காலை 10:15 முதல் 11:15 மணிக்குள் உய்யவந்தாள் அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மேலும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம், தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி