/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விமான நிலையத்திற்கு இடம் எடுக்க கூடாது: கும்பரம் மக்கள் கோரிக்கை
விமான நிலையத்திற்கு இடம் எடுக்க கூடாது: கும்பரம் மக்கள் கோரிக்கை
ராமநாதபுரம் : மண்டபம் வட்டாரத்தில் உள்ள கும்பரம் ஊராட்சியில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். கும்பரம் ஊராட்சிக்கு உட்பட்ட 7 கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஊர்வலமாக வந்து மனு அளித்தனர். இதில், கும்பரம் ஊராட்சியில் 10 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடக்கிறது. இதுபோக நிலக்கடலை, எள், பயறு வகைகள், கொய்யா வளர்க்கப்படுகிறது. 1000 குடும்பத்தினர் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் விமான நிலையம் அமைக்க நிலம் எடுக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனால் ஒட்டு மொத்தமாக தென்னை உள்ளிட்ட விவசாயம் அழிந்துவிடும். எனவே கும்பரத்தில் விமானம் நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.