உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குண்டாறு பெரிய அணைக்கட்டு துார்வாரப்பட்டு புதுப்பிப்பு

குண்டாறு பெரிய அணைக்கட்டு துார்வாரப்பட்டு புதுப்பிப்பு

கமுதி :கமுதி அருகே கோட்டைமேடு குண்டாறு பெரிய அணைக்கட்டு கால்வாயில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு துார் வாரப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை வைகை ஆற்றில் இருந்து பிரிந்து வரும் கிளை ஆறு தான் குண்டாறு. இதில் வரும் தண்ணீர் கமுதி அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு விவசாயம், குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கி வைப்பதற்காக கமுதி கோட்டைமேடு அருகே பெரிய அணைக்கட்டு உள்ளது. இதன் மூலம் முது குளத்துார், சாயல்குடிக்கு தண்ணீர் செல்கிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குண்டாறு வரத்துக்கால்வாய் வழியாக வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு தண்ணீர் பிரித்து அனுப்பி விடப்படுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீரும் உயர்ந்தது. பின் பெரிய ஷட்டர் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் மதகுகள் உடைந்தும் துருப்பிடித்து சேதமடைந்துள்ளது. கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் வந்த தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாகியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. குண்டாறு வரத்து கால்வாய் அணைக்கட்டை பராமரிப்பு செய்ய வேண்டும் என்று பலமுறை விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதன் எதிரொலியாக குண்டாறு பெரிய அணைக்கட்டு பராமரிப்பு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்வாயில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு துார்வாரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ