உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / l ராமநாதபுரத்தில் மழையால் நெல் சாகுபடி l வெள்ள நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு

l ராமநாதபுரத்தில் மழையால் நெல் சாகுபடி l வெள்ள நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டில் பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்துள்ளதால் 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்டேராக நெல்சாகுபடி அதிகரித்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கணக்கெடுக்கும் பணிகள் மும்முரமாக நடக்கிறது.மாவட்டத்தில் மானாவாரியாக 1 லட்சத்து 28 ஆயிரம் எக்டேரில் ஆண்டுதோறும் நெல்சாகுபடி நடக்கிறது. வடகிழக்கு பருவமழையை நம்பி அக்.,க்கு முன்னதாகவே வயல்களை தயார் செய்து நெல் விதைக்கின்றனர். 2024-25ல் ஆண்டு சாரசரி பருவ மழையான 827 மி.மீ., அளவைக் காட்டிலும் அதிகளவாக டிச., வரை 940 மி.மீ., மழை பெய்துள்ளது. இதனால் நெல் சாகுபடி 12 ஆயிரம் எக்டேர் அதிகரித்துள்ளது. இருப்பினும் பருவம் தவறிய ஜன., மாதம் பெய்த மழையால் அறுவடைப்பணிகள் பாதிக்கப்பட்டு சிக்கல், கடலாடி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, நயினார்கோவில், கமுதி உள்ளிட்ட இடங்களில் நெற்பயிர்கள் முளைத்துள்ளன. அவற்றை கணக்கெடுக்கும் பணியில் வருவாய்த்துறையினர், வேளாண் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பிப்., மாதத்தில் வெள்ள நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.தற்போது அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய 46 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 100 டன் வரை நெல் கொள்முதல் நடந்துள்ளது. மேலும் கடந்த 2023-24ல் வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 2ம் கட்டமாக தற்போது ரூ.20 கோடி நிவாரணம் வந்துள்ளது.அவை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ