உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வல்லபை ஐயப்பன் கோயிலில் துலாபாரம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

 வல்லபை ஐயப்பன் கோயிலில் துலாபாரம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாள் முதல் தொடர்ந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பதை போன்று இங்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை ஊஞ்சல் உற்ஸவம் நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் உற்ஸவர் வல்லபை ஐயப்பன் எழுந்தருளப்பட்டு சிறு குழந்தைகள் கன்னி சாமிகள் கைகளால் ஊஞ்சல் ஆட்டுவிக்கும் நிகழ்ச்சி, பின்னர் சிறப்பு தீபாராதனை உள்ளிட்டவைகள் நடக்கிறது. தொடர்ந்து 60 நாட்களும் மதியம் மற்றும் இரவு வேளைகளில் அன்னதானம் பொது மக்களுக்கும், பக்தர் களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. துலாபாரம் எனப்படும் பக்தர்கள் தங்களது எடைக்கு நிகராக வழங்கக் கூடிய பொருட்களை அரிசி, உப்பு, சர்க்கரை, வெல்லம், நாணயங்கள் உள்ளிட்டவைகளை இறைவனுக்கு எடை போட்டு நேர்த்திக் க டனாக வழங்கப்படுகிறது. ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலிலும் துலாபாரம் நிறுவப்பட்டு நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கி வருகின்றனர். இதன் மூலம் உடல் பிணிகள் நீங்குதல், செல்வ செழிப்பு கிடைத்து, வேண்டும் வரம் கிடைக்கவும், தோஷம் நீங்குவதற்கும் ஐதீகமாக கருதப்படுகிறது. தினமும் அதிகாலை 4:00 மணி முதல் கணபதி ஹோமம் அஷ்டாபிஷேகமும் நடந்து வருகிறது. ரெகுநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங் களைச் சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரி சனம் செய்து வருகின்றனர். பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்து வருகிறார். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளை யினர் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ