உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / lசக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயத்தை பராமரிக்க வேண்டும்: சீமைக்கருவேல மரங்களால் புதர்மண்டியுள்ளது

lசக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயத்தை பராமரிக்க வேண்டும்: சீமைக்கருவேல மரங்களால் புதர்மண்டியுள்ளது

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம் பெரிய கண்மாயை அடுத்ததாக சக்கரக்கோட்டை கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் முறையான பராமரிப்பு இல்லாமல் கண்மாய் பரப்பு சுருங்கி வருகிறது. சக்கரக்கோட்டை ஊராட்சியில் இருந்து 24 கி.மீ., பரப்பளவில் கண்மாய் உள்ளது. 2 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பு உள்ளது. மன்னர் சேதுபதி காலத்தில் 14 மடைகள் அமைக்கப்பட்டு,கண்மாய் நிறைந்தால் நீர் வெளியேற மறுகால் பாயும் 16 கலுங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இவைகள் இருந்த இடம் தெரியாமல் தற்போது சீமைக்கருவேல மரங்களால் புதர் மண்டி கிடக்கிறது. பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டாலும் இங்கு பறவைகள் வரத்து பெரிய அளவில் இல்லை.காரணம் இந்த கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் இருப்பதால் பெரிய அளவில் பறவைகள் வந்து தங்குவதில்லை. வனத்துறையினர் சரணாலயமாக அறிவித்ததோடு இந்த கண்மாயை கண்டு கொள்ளவில்லை.இதன் காரணமாக மிகப்பெரிய கண்மாய் பகுதியில் கோடைகாலத்தில் தண்ணீர் இருந்தும் பயனின்றி உள்ளது. நிலத்தடி நீருக்காகவும், கால்நடைகள் பயன்பாட்டிற்கும் இந்த கண்மாய் நீர் பயன்பட்டு வருகிறது. சக்கரக்கோட்டை கண்மாய் பகுதியில் பழங்காலத்தில் அமைக்கப்பட்ட நீர் நிலை சம்பந்தப்பட்ட அனைத்து அழிந்து கொண்டு வருகின்றன. ராமநாதபுரம் நகர கழிவுநீர் கலக்கிறது.எனவே பொதுப்பணித்துறையினர், வனத்துறையினர் இணைந்து சக்கரக்கோட்டை கண்மாய் பகுதியில் பராமரிப்பு பணிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை