கற்றல் திறன் பயிற்சி முகாம்
ராமநாதபுரம்: செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் யூத் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான மாணவர்களுக்கு கற்றல் திறன் பயிற்சி முகாம் நடந்தது. முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். யூத் ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளிநாயகம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரமேஷ், காரைக்குடி மண்டல ஒருங்கிணைப் பாளர் விநாயக மூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் ஐ.ஐ.டி.,-எம் திட்டத் தலைவர் ஹரிகிருஷ்ணன் கற்றல் திறனை வளர்ப்பது குறித்தும், ஐ.ஐ.டி.,யில் உள்ள வாய்ப்புகள் குறித்து பேசினார். கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி, செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் சானாஸ் பரூக் அப்துல்லா வாழ்த்து தெரிவித்தனர். பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த யூத் ரெட் கிராஸ் மாணவர்கள் பங்கேற்றனர்.