மேலும் செய்திகள்
டிச.,19, 20 காவிரி குடிநீர் 'கட்'
17-Dec-2024
ராமநாதபுரம்: மாவட்ட இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், ராமநாதபுரத்தில் ஜன.,5ல் நெடுந்துார ஓட்டப்போட்டி நடக்கிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் மாரத்தான் போட்டிக்கு இணையாக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயரில் நெடுந்தூர ஓட்டப்போட்டி 2025 ஜன.,5ல் பட்டணம் காத்தான் இ.சி.ஆர்., நான்கு வழிச்சாலையில் 2 பிரிவுகளில் நடைபெற உள்ளது.இதன்படி 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ மற்றும் பெண்களுக்கு 5 கி.மீ., மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ மற்றும் பெண்களுக்கு 5 கி.மீ., நெடுந்துார ஓட்டப்போட்டி நடக்கிறது.இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும் 4 முதல் 10 ஆம் இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வங்கிப் புத்தக நகல் உடன் ராமநாதபுரம் மாவட்ட சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்க அலுவலகத்தில் 2025 ஜன., 4 மாலை 5:00 மணிக்குள் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். பதிவு கட்டணம் இல்லை என கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
17-Dec-2024