உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழ நாட்டார் கால்வாய் தண்ணீர் திறக்கும்   ஷட்டர்கள் சேதமடைந்துள்ளதால் பாதிப்பு 

கீழ நாட்டார் கால்வாய் தண்ணீர் திறக்கும்   ஷட்டர்கள் சேதமடைந்துள்ளதால் பாதிப்பு 

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே சித்தனேந்தல் பகுதியில் தடுப்பணையில் இருந்து கீழ நாட்டார் கால்வாய் வழியாக ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் திறக்கும்ஷட்டர் சேதமடைந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் வைகை அணை தண்ணீர் பார்த்திபனுார் மதகணையிலிருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை வைகை ஆற்று கால்வாயில் வருகிறது. பரந்து விரிந்த வைகை ஆற்றில் சித்தனேந்தல் பகுதியில் தடுப்பணை அமைத்து அங்கிருந்து ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதற்காக கீழ நாட்டார் கால்வாய் பகுதியில் ஆறு ஷட்டர்கள் அமைத்து அதில் திறக்கப்படும் நீர் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு செல்கிறது. இந்த ஷட்டர் பராமரிப்பு இல்லாத நிலையில் சேதமடைந்துள்ளது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஷட்டர்களை சீரமைத்து பராமரிக்க வேண்டும். வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நிலையில் கீழ நாட்டார் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க முடியாமல் பாதிப்பு ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ