உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கார்கள் நேருக்கு நேர் மோதல் மதுரை போலீஸ் ஏட்டு பலி ஏழு பேர் படுகாயம்

கார்கள் நேருக்கு நேர் மோதல் மதுரை போலீஸ் ஏட்டு பலி ஏழு பேர் படுகாயம்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இரு வழிச்சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் மதுரை அவனியாபுரம் போலீஸ் ஏட்டு ஆஷிக் அகமது 38, பலியானார். ஏழு பேர் படுகாயமுற்றனர்.தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சுப்பையா பிள்ளைத்தெருவைச் சேர்ந்த சித்திக் மகன் ஆஷிக் அகமது. இவர் மதுரை அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்தார்.இவர் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு மூன்று நாள் விடுப்பு எடுத்து சகோதரி குடும்பத்தினருடன் காரில் ராமேஸ்வரம் அரியமான் பீச் சென்றார். அவரே காரை ஓட்டியபடி திரும்பிக் கொண்டிருந்தார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் 35, காரில் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் சென்றார். இந்த இரு கார்களும் பரமக்குடி அருகே நென்மேனி இருவழிச்சாலை வளைவில் நேற்று மாலை 4:00 மணிக்கு நேருக்கு நேர் மோதின.இதில் ஆஷிக் அகமது சம்பவயிடத்திலேயே பலியானார். ஒரு பெண் குழந்தை உட்பட 7 பேர் படுகாயமுற்றனர். விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ