உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதியில் மகேஸ்வர பூஜை

கமுதியில் மகேஸ்வர பூஜை


Deprecated: mb_convert_encoding(): Handling HTML entities via mbstring is deprecated; use htmlspecialchars, htmlentities, or mb_encode_numericentity/mb_decode_numericentity instead in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 350

கமுதி: கமுதியில் ராமானுஜ பஜனை மடத்தில் 110ம் ஆண்டு மகேஸ்வர பூஜை நடந்தது. கமுதியில் ராமானுஜ பஜனை மடம் சார்பில் 1915ம் ஆண்டு முதல் முன்னோர் காலத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி புரட்டாசி மாதத்தில் காலையில் தெருக்களில் ஊர்வலமாக சென்று பஜனை பாடல்கள் பாடி மக்களிடம் அரிசி, தானியங்கள் பெறப்பட்டு புரட்டாசி மாதம் 5வது சனிக்கிழமை மகேஸ்வரர் பூஜை நடைபெறுவது வழக்கம். ராமானுஜ பஜனை மடத்தில் இந்த ஆண்டு ஐப்பசி முதல் வாரத்தில் புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையாக கணக்கில் கொண்டு 110ம் ஆண்டு மகேஸ்வர பூஜை நடந்தது. பஜனை குழு சார்பில் தானியமாக பெறப்பட்ட அரிசியில் அன்னதானம் செய்யப்பட்டு அன்னக்குவியல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை தீபாரதனை நடந்தது. பின்பு அதை மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜையை கவுரவ செட்டியார் உறவின்முறை டிரஸ்டிகள், ராமானுஜ பஜனை குழு, கவுரவ இளைஞர் நற்பணி மன்றம் நிர்வாகிகள் செய்தனர். கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பாரம்பரியமாக நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை