உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பொதுப்பணித்துறையில் மணல் மூடைகள் பராமரிப்பு

பொதுப்பணித்துறையில் மணல் மூடைகள் பராமரிப்பு

முதுகுளத்துார் : தினமலர் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் பொதுப்பணித்துறை அலுவலகம் வளாகத்தில் உள்ள மணல் மூடைகள் மாற்றி பராமரிப்பு செய்துள்ளனர்.பொதுப்பணித்துறை அலுவலகம் வளாகத்தில் மழைக்காலத்தில் பயன்படுத்துவதற்காக 100க்கும் மேற்பட்ட மணல் மூடைகள் அடுக்கி வைத்திருந்தனர். இதையடுத்து பின் காலப்போக்கில் அலுவலகம் வளாகத்தில் உள்ள மணல் மூடைகள் சேதமடைந்து மணல் வீணாகி வந்ததது. மழை பெய்தால் மணல் மூடைகள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன்எதிரொலியாக பொதுப்பணித்துறை அலுவலகம் வளாகத்தில் உள்ள மணல்மூடைகள் மாற்றி பராமரிப்பு மீண்டும் பயன்படுத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை