மேலும் செய்திகள்
பரமக்குடி அருகே சாலை விபத்தில் நொறுங்கிய கார்
24-Dec-2024
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வாளுடன் புகைப்படத்தை பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பரமக்குடி அருகே பார்த்திபனுார் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ஆஞ்சநேயர். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் வகையில் வாளுடன் புகைப்படத்தை ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் மதப்பிரச்னை ஏற்படுத்தும் வகையில் பதிவிடும் இளைஞர்களின் சமூக வலைதள பக்கங்கள் மாவட்ட வலைதள குற்றப்பிரிவின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையற்ற வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாக்கும் வகையில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., சந்தீஷ் எச்சரித்துள்ளார்.
24-Dec-2024