உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தனுஷ்கோடி டூ இலங்கை கள்ளப்படகில் சென்றவர் கைது

தனுஷ்கோடி டூ இலங்கை கள்ளப்படகில் சென்றவர் கைது

ராமநாதபுரம்; இலங்கை நுவரொலியா பகுதியை சேர்ந்தவர் சிவயோகம் 45. இவர் 2024 ல் இலங்கையில் இருந்து பாஸ்போர்ட் மூலமாக விமானத்தில் இந்தியா வந்தார். ஆனால் அவரது பாஸ்போர்ட் தண்ணீரில் சேதமடைந்ததால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. சட்ட விரோதமாக தமிழகத்தில் தங்கியிருந்த நிலையில் ஜூலை 24 ல் காரைக்காலில் இருந்து காங்கேசன் துறை செல்லும் கப்பலில் இலங்கை செல்ல டிக்கெட் எடுத்துள்ளார். கப்பலில் ஏற சென்ற போது பாஸ்போர்ட் இல்லாததால் கப்பலில் ஏற்ற மறுத்து விட்டனர். தனுஷ்கோடியை சேர்ந்த குமார் 53, என்பவரை அணுகி கள்ளப்படகில் இலங்கை செல்ல வேண்டும் என சிவயோகம் தெரிவித்துள்ளார். அதற்கு குமார் ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார். இதையடுத்து தனுஷ்கோடியிலிருந்து நாட்டுப்படகில் சிவயோகத்தை ஏற்றிக்கொண்டு குமார் இலங்கை தலைமன்னார் பகுதியில் இறக்கிவிட சென்ற போது இலங்கை கடற்படையினரிடம் சிக்கினர். இருவரையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வந்து விசாரித்தனர். பின் தலை மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை