உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பூக்குழி இறங்கியவர் தவறி விழுந்து பலி

பூக்குழி இறங்கியவர் தவறி விழுந்து பலி

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே குயவன்குடி சுப்பையா கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய போது தவறி விழுந்த பக்தர் பலியானார்.ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் சுப்பையா கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழாவின் போது ஏப்.,10 ல் பூக்குழி இறங்கும் நிகழ்வு நடந்தது. காலை 11:00 மணிக்கு வாலாந்தரவையைச் சேர்ந்த கேசவன் 56, பூக்குழி இறங்கிய போது தவறி விழுந்தார். உடலில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று இறந்தார். கேசவன் மனைவி விக்னேஷ்வரி புகாரில் கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை