உள்ளூர் செய்திகள்

மண்டல பூஜை விழா

உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கை அருகே களக்குடி கிராமத்தில் உள்ள ஓமாச்சி முத்து காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை விழா நடந்தது. புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கோயிலில் செப்.16ல் கும்பாபிஷேகம் நடந்தது.மண்டல பூஜையை முன்னிட்டு மூலவர் ஓமாச்சி முத்து காளியம்மன், முருகன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. புனித கும்ப நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை களக்குடி ஓமாச்சி முத்து காளியம்மன் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை