உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயில் யானைக்கு ரூ.43 லட்சத்தில் மணிமண்டபம்; பணி துவங்கியது

ராமேஸ்வரம் கோயில் யானைக்கு ரூ.43 லட்சத்தில் மணிமண்டபம்; பணி துவங்கியது

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி, திருவிழா காலத்தில் கோயில் ரத வீதியில் வலம் வந்த யானை பவானி 2012ல் கோவை அருகே தேக்கம்பட்டியில் நடந்த புத்துணர்வு முகாமில் ஆற்றில் சிக்கி உயிரிழந்தது. பக்தர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற யானை பவானிக்கு மணி மண்டபம் அமைக்க அறநிலையத்துறை முடிவு செய்தது. ஆனால் 12 ஆண்டுகள் ஆகியும் கட்டுமானப் பணி துவங்கவில்லை.பக்தர்களின் வலியுறுத்தலால் தற்போது ரூ. 43 லட்சத்தில் ராமேஸ்வரம் கோயில் கார் பார்க்கிங் பகுதியில் கருங்கல்லில் மணிமண்டபம் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. மணி மண்டபத்திற்குள் யானை பவானியின் சிலை வைக்கப்பட உள்ளது. மணிமண்டபம் கட்டுமானப் பணிகள் ஜூனில் முடிவடையும் என ஸ்தபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ