உத்தரகோசமங்கையில் நாளை மாணிக்கவாசகர் குருபூஜை
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் அக்னி தீர்த்த தெப்பக்குளம் அருகே மாணிக்கவாசகருக்கு தனி சன்னதி உள்ளது. இவர் ஆனி மாத மகம் நட்சத்திரத்தில் சிவபெருமானோடு இரண்டற கலந்தார் என சொல்லப்படுகிறது. எனவே இந்நாளில் சிவன் கோயில்களில் மாணிக்கவாசகருக்கு குருபூஜை நடக்கிறது. உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் மாணிக்கவாசகர் சன்னதியில் காலை 9:00 முதல் மதியம் 12:30 மணி வரை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள், பாராயணம், கூட்டுப் பிரார்த்தனை மற்றும் அன்னதானம் உள்ளிட்டவைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா மந்திர் ஆகியோர் செய்து வருகின்றனர்.