உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டியில் அதிகம் மீன்கள் சிக்கின

தொண்டியில் அதிகம் மீன்கள் சிக்கின

தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடலில் அதிகளவில் மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சிஅடைந்தனர்.தொண்டியை புதுக்குடியை சேர்ந்த கண்ணன்நாட்டுபடகில் கருப்பையா, புதுராஜா, உன்னிகதிரேசன், ராமர், முருகன் ஆகிய மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். கடந்த இரு நாட்களாக வலையில் அதிகளவில் மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மீனவர்கள் கூறியதாவது: சில நாட்களாக மீன்பிடி குறைவாக இருந்தது. கடந்த இரு நாட்களாக மீன்பிடிக்க சென்ற போது பல ஆயிரம் கிலோ மீன்கள் கும்பலாக இருப்பதை பார்த்தோம். அப்போது வலையை விரித்ததில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 5000 கிலோ மீன்கள் சிக்கியது.பல மாதங்களுக்கு பிறகு அதிகளவில் மீன்கள் கிடைத்துள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை