மேலும் செய்திகள்
35 மீனவர்களுக்கு நவ.17 வரை காவல்
8 hour(s) ago
கீழே கிடந்த பர்சை ஒப்படைத்த மாணவர்களுக்கு மக்கள் பாராட்டு
10 hour(s) ago
விழிப்புணர்வு
12 hour(s) ago
மூன்று தனிப்படை அமைப்பு
12 hour(s) ago
கண்மாய் நீர் பாய்ச்சுதல்
12 hour(s) ago
திருவாடானை: தொண்டி கடற்கரை ஓரமுள்ள 20 இறால் பண்ணைகளில் மரைன் போலீசார் விடிய, விடிய சோதனை செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே அரசங்கரை கடற்கரை வழியாக போதை பொருள் இலங்கைக்கு கடத்த இருப்பதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்திலிருந்து 5 கி.மீ. துாரத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் சேமன்கோட்டை இறால்பண்ணையில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கபட்டிருந்த ரூ.110 கோடி மதிப்புள்ள 875 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யபட்டது. இச்சம்பவம் தொடர்பாக எஸ்.பி.பட்டினம், தொண்டி, காரங்காடு, முள்ளிமுனை, உப்பூர், திருப்பாலைக்குடி, தேவிபட்டினம் உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில் உள்ள 20 இறால்பண்ணைகளில் தேவிபட்டினம் மரைன் இன்ஸ்பெக்டர் கனகராஜ், எஸ்.ஐ. அய்யனார், தொண்டி நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் போலீசார் கடந்த இரு நாட்களாக விடிய, விடிய சோதனை செய்தனர். இறால் பண்ணைகளில் உள்ள அறைகளில் கஞ்சா பதுக்கி வைக்கபட்டுள்ளதா என சோதனையிடபட்டது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் விசாரித்தனர்.
8 hour(s) ago
10 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago